''காலணிகளை அணியக் கூட நேரமில்லாத சூழலில் வெளியேற்றப்பட்டேன்" - அஷ்ரப் கனி
காலணிகளை அணியக் கூட நேரம் இல்லாத நிலையில், நாட்டை விட்டு தாம் வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பிய போது ஹெலிகாப்டரில் பெட்டி நிறைய பணத்துடன் தப்பியதாக ரஷ்யா கூறியிருந்தது. மேலும், இக்கட்டான சூழ்நிலையில் அதிபர் நாட்டைவிட்டு தப்பியது விமர்சனத்திற்கும் உள்ளானது.
இச்சூழலில் அஷ்ரப் கனி வெளியிட்டுள்ள வீடியோவில், தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கலந்தாலோசிக்க எண்ணியதாகவும், ஆனால் அவர்கள் தன்னை தேடியதை அறிந்து காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட தன்னால், அவ்வளவு பணத்தை எப்படி எடுத்து வர முடியும் எனவும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆப்கான் திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.
Comments